5 ஆசனங்கள் இல்லையேல் அமைச்சு பதவியினை ஏற்பதில் ஆர்வம் செலுத்தமாட்டேன்- டக்ளஸ் தேவாநந்தா

5 ஆசனங்கள் இல்லையேல் அமைச்சு பதவியினை ஏற்பதில் ஆர்வம் செலுத்தமாட்டேன்- டக்ளஸ் தேவாநந்தா

தமது கட்சிக்கு வடக்கு மற்றும் கிழக்கில் நான்கு அல்லது ஐந்து ஆசனங்களை பெற்றுக்கொள்ள மக்கள் வாய்ப்பளிக்காவிட்டால் தாம் அமைச்சு பதவியினை ஏற்பதில் ஆர்வம் செலுத்தப் போவதில்லை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்.

 

வேலனையில் இன்று இடம்பெற்ற தமது அங்கத்தவர்களுடனான சந்திப்பின் பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

மக்களுக்கு தீர்க்கப்பட வேண்டிய ஏராளமான பிரச்சினைகள் உள்ளன.

 

அவற்றில் வேலை வாய்ப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் விவகாரம் போன்வற்றிற்கும் எதிர்வரும் காலத்தில் தீர்வு காணப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அத்துடன் கடந்த ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்ட வீடுகளை பூர்த்தி செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

ஆகவே நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமது கட்சிக்கு மக்கள் அதிகளவான ஆசனங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவாநந்தா வலியுறுத்தியுள்ளார்.