தவறான செய்திகளை வெளியிடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை : ஜனாதிபதி ஊடகப்பிரிவு!
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், முன்னொருபோதும் இல்லாத வகையில் சுற்றுச்சூழல் அழிக்கப்பட்டுள்ளதாக, தவறான செய்திகளை வெளியிடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி தீவைக்கப்படுவதாகவும், காடுகளில் உள்ள மரங்கள் வெட்டப்படுவதாகவும் தவறான செய்திகள் வெளியிடப்படுவதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இவ்வாறான சுற்றுச்சூழல் அழிப்புகள் கடந்த காலங்களில் இடம்பெறவில்லையெனவும், இதுபோன்ற சட்டவிரோதமான நடவடிக்கைகளின் போது அரசாங்கம் அமைதியாக இருப்பதாகவும் செய்தியாளர்கள் பொது மக்களை நம்பவைக்க முயற்சிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
மேலும், சுற்றுச்சூழல் அழிவு குறித்து தவறான செய்திகளை? சமூக ஊடகங்களும் சில அச்சு ஊடகங்களும் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடகங்களும் பரப்பி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு வெளியிடப்படும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவையென நிரூபிக்கப்படுமானால் அவை அகற்றப்படுமெனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.