கொரோனா பரவாமலிருக்க அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன

கொரோனா பரவாமலிருக்க அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன

திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள இந்திய எண்ணெய் கப்பலின் 17 பணிக்குழாமினருக்கு கொவிட் 19 தொற்றுறுதியான சம்பவத்தை அடுத்து அந்த வைரஸ் சமூகத்தில் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானி இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்ர சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் கொவிட் 19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 2 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொவிட் 19 தொற்றில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 210 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 139 ஆக குறைவடைந்துள்ளது.