14 நாட்களுக்குள் பதிவு செய்யுங்கள் - விடுக்கப்பட்ட அவசர அறிவிப்பு

14 நாட்களுக்குள் பதிவு செய்யுங்கள் - விடுக்கப்பட்ட அவசர அறிவிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் காணப்படுகின்ற குளங்களின் கீழுள்ள வயல் காணிகளுக்கான ஆவணங்களை வைத்திருப்பவர்களை எதிர்வரும் 14 நாட்களுக்குள் (11.10.2020ற்கு முன்னர்)தம்மிடம் பதிவு செய்யுமாறு பனிக்கன்குளம் கமக்கார அமைப்பினர் அவசர அறிவித்தல் விடுத்துள்ளனர்.

பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள பனிக்கன்குளம், நாவிக்குளம், குஞ்சுமுறியாக்குளம், விளாத்திகுளம் மற்றும் கிழவன்குளம் ஆகிய ஐந்து குளங்களின் கீழ் உள்ள வயல் நிலங்களுக்கு சொந்தக்காரர்களையே 14 நாட்களுக்குள் (11.10.2020ற்கு முன்னர்) பனிக்கன்குளம் கமக்கார அமைப்பில் பதிவு செய்யுமாறு அவசர அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பதியத் தவறும் பட்சத்தில் இதுவரை காலமும் செய்கை பண்ணப்படாத கமக்கார அமைப்பிடம் பதிவு செய்யப்படாத வயல் நிலங்கள் கிராமத்தில் வயல் நிலங்கள் அற்ற மக்களுக்கு செய்கை பண்ணுவதற்கு வழங்குவதற்காக அமைப்பின் பொதுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது

இந்த தீர்மானத்திற்கு அமைவாக குறித்த ஐந்து குளங்களின் கீழும் காணி ஆவணங்களை வைத்திருக்கின்ற காணி உரிமையாளர்கள் 14 நாட்களுக்குள் (11.10.2020ற்க முன்னர்) பனிக்கன்குளம் கமக்கார அமைப்பில் பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில் கமக்கார அமைப்பு புதிய நிர்வாகத் தெரிவு கூட்டம் நேற்றைய தினம் (25)பனிக்கன்குளம் பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து பனிக்கன்குளத்தில் வயல் நிலங்களற்ற மக்களுக்கான வயல் நிலங்களை வழங்குமாறு பொதுமக்களால் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது

இதன்போது கிராம மக்கள் பனிக்கன்குளத்திலுள்ள குறித்த ஐந்து குளங்களின் கீழும் உள்ள செய்கை பண்ணப்படாத காணிகள் இருப்பதாகவும் அதனை வயல் நிலங்கள் அற்று இருக்கின்ற தமக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரிய நிலையில் குறித்த பொது குழுவினால் மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு அமைப்பின் தலைவர் 0776354841அல்லது அமைப்பின் செயலாளர் 0768947121 உடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது