ஐந்து மாடி கட்டிடடத்தின் உரிமையாளரிடம் காவல் துறையினர் விசாரணை

ஐந்து மாடி கட்டிடடத்தின் உரிமையாளரிடம் காவல் துறையினர் விசாரணை

கண்டி - பூவெலிக்கடை பகுதியில் சரிந்து வீழ்ந்த ஐந்து மாடிக்கட்டிடத்தின் உரிமையாளரிடம் காவல் துறையினர் சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர்.

இதற்கமைய அவர் வழங்கிய தகவல்களுக்கு அமைய குறித்த கட்டிடத்தை நிர்மாணித்த மாத்தளை பகுதியில் வசிக்கும் நபரிடம் சாட்சியம் ஒன்றை பெற்றுக்கொள்ள இன்றைய தினம் காவல் துறை குழுவொன்று அந்த இடத்திற்கு விரைந்தது.

இதேவேளை இடிந்து வீழ்ந்ததில் சிக்குண்டு உயிரிழந்த தனது சகோதரரின் குடும்பத்திற்கு உரிய நீதியை பெற்றுக்கொடுக்குமாறு உயிரிழந்தவரின் சகோதரர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இங்கிலாந்திலிருந்து நாட்டிற்கு வருகை தந்து தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ள குறித்த நபர், இணையத்தளத்தின் வாயிலாக குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.