அரிசி இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்!

அரிசி இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்!

50 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசியினை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லக் சதொச நிறுவனம் ஊடாக அரிசியினை விநியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே பெரும்பாலும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அரிசி இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை நிர்ணயிக்கப்பட்ட விலையினை விட அதிக விலைக்கு அதிக விலையில் அரிசியினை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த சில நாட்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள சுற்றிவளைப்பு நடவடிக்கையின போது இவ்வாறான மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 44 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாவும் வர்த்தக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.