இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த வைத்தியசாலையில் அனுமதி

இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த வைத்தியசாலையில் அனுமதி

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரும், இராஜாங்க அமைச்சருமான இந்திக்க அனுருத்த விபத்தொன்றில் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் இராஜாங்க அமைச்சர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிவேக நெடுஞ்சாலையில் அவர் பயணித்த வாகனமே இன்று விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

இந்த நிலையில் அவரது உடல் நிலை மோசமான கட்டத்தில் இல்லை என்று வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுகின்றன.