பாகிஸ்தானில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு – ஒருவர் உயிரிழப்பு, இரண்டு குழந்தைகள் உட்பட 15 பேர் காயம்

பாகிஸ்தானில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு – ஒருவர் உயிரிழப்பு, இரண்டு குழந்தைகள் உட்பட 15 பேர் காயம்

பாகிஸ்தானின் – ராவல்பிண்டி நகரில் சனநெரிசலான சந்தையில் சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு குழந்தைகள் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் இராணுவத்தின் பொது தலைமையகத்திற்க அருகில் உள்ள சதார் என்ற பகுதியில் இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியை சுற்றி வளைத்துள்ள அதிகாரிகள், மீட்புப் பணிகளை முன்னெடுத்துள்ள அதேவேளை புலனாய்வு குழுக்கள் மற்றும் தடய அறிவியல் ஆய்வகத்தைச் சேர்ந்தவர்கள் அப்பகுதியிலிருந்து ஆதாரங்களை சேகரித்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த குண்டுவெடிப்பு “ஒழுங்கமைக்கப்பட்ட பயங்கரவாதத்தின் முயற்சி, ஆனால் பொதுமக்களின் வாழ்க்கையுடன் விளையாடுவோர் சட்டத்திலிருந்து தப்ப முடியாது” என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயை நாடு எதிர்த்துப் போராடும் இவ் வேளையில், ஏற்பட்டுள்ள இந்த குண்டுவெடிப்புக்கு எந்த அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.