அறிமுகப்படுத்தப்பட்டது புதிய 1000 ரூபாய்

அறிமுகப்படுத்தப்பட்டது புதிய 1000 ரூபாய்

புதிய 1000 ரூபாய் காசை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி லக்ஷ்மன் இன்று (24) வழங்கினார்.

பிரதமருக்கும் மத்திய வங்கியின் ஆளுநருக்கும் இடையே விஜேராம மாவத்தையிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதன்போது நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் எதிர்கால வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து மத்திய வங்கி ஆளுநருடன் ஒரு நல்ல கலந்துரையாடலை மேற்கொண்டதாக பிரதமரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.