இலங்கைக்கு யுனிசெப் ஸ்தாபனம் பாராட்டு

இலங்கைக்கு யுனிசெப் ஸ்தாபனம் பாராட்டு

சிறுவர்களுக்கான நீதி நியாயத்தை உறுதிப்படுத்துவது தொடர்பான சட்டங்களை திருத்தி அமைக்க இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கையை யுனிசெப் ஸ்தாபனம் பாராட்டியுள்ளது.

தொழில் வயதெல்லை 14 யிலிருந்து 16 ஆக அதிகரிப்பது எந்தவொரு சிறுவனையும் சிறைச் தண்டனை வழங்காமல் இருக்க அரசாங்கம் கொள்கை அளவில் தீர்மானம் எடுத்துள்ளது. இத்தீர்மானத்தையும் பாராட்டுவதாக தெரிவித்துள்ளது.

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள், துஸ்பிரயோகங்கள், சிறுவர்களின் ஊதியத்தை சூரையாடுவதை தடுப்பது போன்ற விடயங்களுக்கு சாதகமான நடவடிக்கைகளை முன்னெடுக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு தொகுதியை கட்டியெழுப்புவதற்கும் நீதித்துறையை பலப்படுத்துவதற்கும் யுனிசெப் ஸ்தாபனம் இலங்கை அரசாங்கத்திற்கு பூரண ஆதரவு வழங்குமென ஐ.நா சிறுவர் நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெற்காசிய நாடுகளுள் உறுதியான சுகாதார பாதுகாப்பான முதலாவது நாடாக அமைந்து இலங்கை, கொவிட் அச்சுறுத்தலை கட்டுப்படுத்தி மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பாடசாலைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதையும் ஐ.நா. சிறுவர் நிதியம் பாராட்டியுள்ளது.