20ஆவது திருத்தத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு -தொடரும் மனுத்தாக்கல்

20ஆவது திருத்தத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு -தொடரும் மனுத்தாக்கல்

ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக இதுவரையில் 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் உட்பட ஆறு பேரால் இன்று (24) உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இவரை விட, யாழ்ப்பாணத்திலிருந்து எஸ்.சி.சி.இளங்கோவன் மற்றும் நாட்டின் இரண்டு குடிமகன்கள், மனித உரிமை ஆர்வலர் ஸ்ரீமி அப்துல் சனுன் ஆகியோரும் இன்று மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இதேவேளை ஸ்ரீலங்கா ட்ரான்ஸ்பரன்ஸி இன்ரனெஷனல் அமைப்பும் இன்று உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.