சடலத்தை தகனம் செய்யும் போது வெடித்த சமையல் எரிவாயு - 7 பேர் வைத்தியசாலையில்...!

சடலத்தை தகனம் செய்யும் போது வெடித்த சமையல் எரிவாயு - 7 பேர் வைத்தியசாலையில்...!

கொட்டிகஹாவத்தை பொது மயான தகனசாலையில் சமையல் எரிவாயு வெடித்ததில் எழுவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சடலம் ஒன்றை தகனம் செய்யும் போதே இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அருகில் நின்றுக்கொண்டிருந்த எழுவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.