போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபருக்கு மரண தண்டனை

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபருக்கு மரண தண்டனை

106 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

1998ஆம் வருடம் புறக்கோட்டை பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபருக்கு 2012ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து சந்தேக நபர் மேற்கொண்ட மேன்முறையீட்டைத் தொடர்ந்து, குறித்த வழக்கு விசாரணைகள் மறு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்தது.

அதன்படி, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இன்று குறித்த நபருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.