
அரிசி விலை அதிகரிப்பிற்கு இதுவா காரணம்...!
நெல் ஆலைகளுக்கு நெல் கிடைக்காமை காரணத்தினால் சந்தையில் அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அரிசி இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த போது சந்தையில் அரிசி ஒரு கிலோ கிராமின் விலை 100 ரூபாவாக அதிகரித்துள்ளது.
சந்தையில் காணப்படும் குறித்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அரிசி இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிய வருகிறது.
குறித்த விடயம் தொடர்பில் கடந்த சில தினங்களுக்கு முன் நெல் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும், அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது நெல் இறக்குமதி செய்வது தொடர்பிலான கருத்துக்கள் முன் வைக்கப்படடன.
இதேவேளை கடந்த சில நாட்களாக சந்தையில் தேங்காயின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதால் சலுகை விலையுடன் நுகர்வோருக்கு தேங்காயை பெற்றுக் கொடுக்கும் வேலைத் திட்டமொன்றை பெருந் தோட்டத்துறை அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.
இதற்கமைய கொழும்பை அண்டிய பிரதேசங்களில் பாரவூர்தி போன்ற வாகனங்களை பயன்படுத்தி 60 ரூபாவிற்கு தேங்காய் வழங்கும் வேலைத் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.