கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பரிந்துரைத்து தீர்மானம்

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பரிந்துரைத்து தீர்மானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று நாடாளுமன்றில் எழுப்பவிருந்த கேள்வி ஒன்று தொடர்பாக விவாதம் இடம்பெற்று வருகிறது.

அவர் இன்று எழுப்பவிருந்த கேள்விக்கு, சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை.

அவர் எழுப்பவிருந்த கேள்வி குறித்து நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெறுவதாலும், பொதுமுக்கியத்துவம் வாய்ந்த விடயம் ஒன்று தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் உட்பட ஒருவர் மட்டுமே கேள்வி எழுப்ப முடியும் என்றும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

எனினும் இதற்கு எதிர்கட்சியினர் எதிர்ப்பை வெளியிட்டனர்.

தாம் எழுப்பவிருந்த கேள்வி தொடர்பான நீதிமன்ற வழக்கு விசாரணை நிறைவடைந்து விட்டதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், நாடாளுமன்ற நடவடிக்கைகள் குழுவின் உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனும், குறித்த வழக்கு விசாரணை நிறைவடைந்துவிட்டதுடன், இந்த பிரச்சினையுடன் தொடர்புடைய எந்த வழக்கும் தற்போது நீதிமன்றங்களில் விசாரணையில் இல்லை என்று கூறினார்.

எனினும் ஆளுந்ததரப்பின் பிரதம அமைப்பாளர் தினேஸ்குணவர்தன, இது குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பரிந்துரைத்து தீர்மானம் எடுப்பதாக கூறினார்.

இதனை தொடர்ந்து வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வந்த நிலையில், தாம் எடுத்த தீர்மானத்தை அறிவிப்பதாக சபாநாயகர் கூறிய நிலையில், சபையின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை அமைச்சர் தினேஸ்குணவர்தன அறிவித்து சபை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.