ஜனவரி முதல் சில வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

ஜனவரி முதல் சில வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சில வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளது.

சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளார்.

கொட்டன் பட்டுக்காக (Cotton Bud) பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிலான சிறிய குழாய், ஷெஷே பக்கெட்கள் மற்றும் கிருமிநாசினி அடங்கிய சிறிய பிளாஸ்டிக் பொருட்களுக்கே இவ்வாறு தடை விதிக்கப்படவுள்ளது.

இதற்கான மாற்றுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு உற்பத்தியாளர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Cotton Bud இணை, சுகாதார நடவடிக்கைகளுக்காக மாத்திரம் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.