
சட்டமா அதிபர்-பதில் காவல்துறைமா அதிபர் இடையே விசேட கலந்துரையாடல்
குற்றத் தடுப்பு நடவடிக்கைகளின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்காக பதில் காவல்துறைமா அதிபர் மற்றும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் குழுவொன்று சட்டமா அதிபரை சந்தித்துள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.