கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது

கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது

கம்பளை-வெலம்பட-ரெகவல்பொல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது பாவனைக்கு உதவாத ஒரு தொகை கழிவுத் தேயிலையுடன் சந்தேக நபர் ஒருவரை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த கழிவுத் தேயிலையுடன் அனுமதி பத்திரம் இல்லாத பாரவூர்தி ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே சந்தேக நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, குறித்த பாரவூர்தியில் இருந்த 1924 கிலோகிராம் 780 கிராம் கழிவுத் தேயிலையை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் பறிமுதல் செய்து வெலம்பட காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.