புகையிரதத்துடன் மோதிய பாடசாலை வான்! தெய்வாதீனமாக தப்பிய மாணவர்கள்

புகையிரதத்துடன் மோதிய பாடசாலை வான்! தெய்வாதீனமாக தப்பிய மாணவர்கள்

கட்டுநாயக்க பிரதேசத்தில் பாடசாலை வான் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து கட்டுநாயக்க சரத் மாவத்தையில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவை வீதியில் இடம்பெற்றுள்ளது.

இதில் கொழும்பு - சிலாபம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

எவ்வாறாயினும் சம்பவத்தில் எந்தவொரு உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

வானில் பயணித்த 17 மாணவர்களும் அதன் சாரதியும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தள்ளனர்.