கிளிநொச்சி-முகமாலை பகுதியிலிருந்து நேற்றைய தினமும் மனித எச்சங்கள் மீட்பு

கிளிநொச்சி-முகமாலை பகுதியிலிருந்து நேற்றைய தினமும் மனித எச்சங்கள் மீட்பு

கிளிநொச்சி - முகமாலை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூன்று பெண் பேராளிகளுடையதாக இருக்கலாம் என நம்பப்படும் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தில் நேற்றும் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் நேற்று முன்தினம்;, மனித எச்சங்கள் உட்பட தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய இலக்கத் தகடு என்பன அடையாளம் காணப்பட்டன.

இதையடுத்து, நேற்று முன்தினம் பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட நீதவான் த.சரவணராஜா மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் முன்னிலையில் அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டன.

அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னாள் பெண் போராளிகளுடையதாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இந்த நிலையில், நேற்றைய தினமும் அங்கு அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது, மேலும் சில மனித எச்சங்கள் மீட்கப்பட்டதாக பளை காவல்துறையினர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தனர்.

குறித்த அகழ்வு பணிகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளதாகவும் பளை காவல்துறையினர் குறிப்பிட்டனர்.