இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,321ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,321ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,321ஆக அதிகரித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வருகைத் தந்த 5 பேர் மற்றும் எதியோபியாவில் இருந்து நாடு திரும்பியிருந்த ஒருவருக்குமே கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.