
வடமாகாண பிரதி காவல்துறைமா அதிபர் வெளியிட்டுள்ள முக்கிய விடயம்
வடக்கில் இடம்பெறும் வன்முறைக் கும்பல்களின் செயற்பாடுகள் அனைத்தும் உடனடியாக கட்டுப்படுத்தப்படும் என வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் சஞ்சீவ தர்ம ரட்ண தெரிவித்துள்ளார்.
சமூக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக முப்படைகளின் உதவி தேவைப்படின் அவர்களின் உதவியுடன் அந்த குழுக்களின் செயற்பாடுகள் அனைத்தும் முடக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபராக நியமிக்கப்பட்ட அவர் இன்று காங்கேசந்துறையில் உள்ள அலுவலகத்தில் கடமைகளை ஏற்றுக் கொண்டார்.
இதனையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், வட மாகாணத்தில் இடம்பெறும் போதைப்பொருள் பாவனைகள், சட்ட ஒழுங்கு விதி முறை மீறல்கள், வன்முறைகள் அனைத்துக்கும் எதிரான நடவடிக்கைகள் தொடரும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சட்டத்தை மீறி செயற்படும் குழுக்களுக்கு எதிராக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் சஞ்சீவ தர்ம ரட்ண தெரிவித்துள்ளார்.