
மக்கள் மீது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நம்பிக்கையில்லை : அமைச்சர் சமல்!
பொது மக்கள் மீது நம்பிக்கையில்லாத காரணத்தினாலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கோருவதாக நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
வாய்மூல வினாக்கான சந்தர்ப்பத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன பிரதமர் மகிந்த ராஜபக்ஸவிடம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுப்பியிருந்தார்
இந்த நிலையில், பிரதமர் சார்பாக குறித்த கேள்விக்கு பதிலளித்த போதே, நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஸ இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பொலிஸ் கடமைகளை செய்வதற்காகவே பொலிஸ் அதிகாரிகள் இருக்கின்றார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்காகவும் 85 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்களே இருக்கின்றார்கள்.
இந்த நிலையில் அவர்களில் 38 ஆயிரம் பேர் பாதுகாப்பு நடவடிக்கைளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். பொலிஸ் உத்தியோத்தர்களின் துணையின்றி மக்களிடம் செல்ல பயம் எனில், பொது மக்கள் மீது நம்பிக்கையில்லாத காரணத்தினாலேயே பொலிஸ் உத்தியோகத்தர்கள் கோருகின்றார்கள்.
அதைவிடுத்து FILE களை தூக்கி செல்வதற்காக பொலிஸ் உத்தியோத்தர்களை கோருகின்றீர்கள்? நாம் பாதுகாப்பை வழங்குவோம்.
முழு நாட்டுக்கும் பாதுகாப்பை வழங்குவோம். இரண்டு பாதுகாப்பு உத்தியோத்தர்கள் இதுவரை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அது இரண்டாக குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சில பொலிஸ் பிரிவுகளில் கடமையாற்றுவதற்காக ஆளணிப் பற்றாக்குறை காணப்படுகின்றது. இந்த நிலையில் உங்களுக்கு பாதுகாப்பை வழங்குவதா அல்லது மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதா?” என இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.