கோபா குழுவின் தலைவராக திஸ்ஸ வித்தாரன நியமனம்

கோபா குழுவின் தலைவராக திஸ்ஸ வித்தாரன நியமனம்

அரசாங்க கணக்குகள் பற்றிய நாடாளுமன்ற குழுவின் (கோபா குழு) தலைவராக லங்கா சம சமாஜக் கட்சியின் தலைவரும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர்.திஸ்ஸ விதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 27 அன்று சமர்ப்பிக்கப்பட்ட ஒரு முன்மொழிவு நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் 22 உறுப்பினர்களைக் கொண்ட கோபா குழு நியமிக்கப்பட்டது.

இந்த கோபா குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய நாடாளுமன்றத்தின் கோபா குழு உறுப்பினர்கள் விபரம்,

1. பேராசிரியர். திஸ்ஸ விதாரண

2. உதய பிரபாத் கம்மன்பில

3. துமிந்த திஸாநாயக்க

4. தயாசிறி ஜயசேகர

5. லசந்த அழகியவண்ண

6. சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே

7. செஹான் சேமசிங்க

8. பிரசன்ன ரணசிங்க

9. திஸ்ஸ அத்தநாயக்க

10. ஹரின் பெர்னாண்டோ

11. நிரோஷன் பெரரோ

12. பைஸல் காஷிம்

13. அசோக அபேசிங்க

14. புத்திக பத்திரண

15. காதர் மஸ்தான்

16. சிவஞானம் சிறீதரன்

17. உபுல் கலப்பத்தி

18. பீ.வை.ஜீ. ரத்னசேக்கர

19. வீரசுமன வீரசிங்ஹ

20. ரஞ்சித் பண்டார

21. மொஹமட் முஸாமில்

22. ஹரின் அமரசூரிய