கிளிநொச்சி - செருக்காய் கடற்பரப்பில் தரையிறக்கும் வர்த்தகம் தொடர்பில் வெளியான தகவல்

கிளிநொச்சி - செருக்காய் கடற்பரப்பில் தரையிறக்கும் வர்த்தகம் தொடர்பில் வெளியான தகவல்

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக வடக்கிற்கு கொண்டு வரப்படும் போதைப்பொருட்களை கிளிநொச்சி - செருக்காய் கடற்பரப்பில் தரையிறக்கும் வர்த்தகம் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சி செருக்காய் கடற்பரப்பில் வைத்து 77 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டது.

குறித்த கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றிலிருந்தே கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய, இந்தியாவிலிருந்து வடக்கிற்கு போதைப்பொருள் கொண்டு வரப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய கடற்பிராந்தியங்களில் கடற்படையினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் கடும் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

இந்தநிலையில், போதைப்பொருள் வர்த்தகர்கள் தங்களது பொருட்களை கிளிநொச்சி கடற்பரப்பில் தரையிறக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக காவற்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, பசறை காவற்துறை பிரிவிற்குட்பட்ட சங்கபோவ மாவத்தையில் வீட்டு தோட்டம் ஒன்றில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகளை காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

காவற்துறைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன