கண்டி – பூவெலிக்கடை 5 மாடி கட்டிடம் விவகாரம்- உறவினர்களின் முக்கிய குற்றச்சாட்டு
கண்டி – பூவெலிக்கடை பகுதியில் 5 மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்தமை தொடர்பில், இதுவரையில் உரிய முறையில் விசாரணைகள் இடம்பெறவில்லை என சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களும், பிரதேசவாசிகளும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறித்த அனர்த்தத்தில் உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தையும், அவரின் தாய் மற்றும் தந்தை ஆகியோரின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் மஹய்யாவ பொது மயானத்தில் இடம்பெறவுள்ளன.
கடந்த 5 ஆம் திகதி குறித்த 5 மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் அவர் உயிரிழந்தனர்.
சம்பவம் தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்ள 5 அதிகாரிகள் கொண்ட காவல்துறை குழு நியமிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், குறித்த கட்டடத்தின் உரிமையாளரான லெவ்கே என்பவரிடம் காவல்துறையினர் உரிய விசாரணைகளை இதுவரையில் மேற்கொள்ளவில்லை என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன், சம்பவம் இடம்பெற்ற பகுதியின் அருகில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த CCTV காணொளி காட்சிகளையும் உரிய முறையில் பெற்று விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.