
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைபுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைபுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் இன்று(புதன்கிழமை) இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளனது.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைபில் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
திருத்தத்தை நிறைவேற்றுவதாக இருந்தால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் மக்கள் கருத்துக்கணிப்பு அவசியம் என அறிவிக்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை ஆட்சேபனைக்கு உட்படுத்தி சட்டத்தரணி இந்திக கால்லகே நேற்று உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றித் தாக்கல் செய்திருந்தார்.
சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில திருத்தங்கள், இலங்கை அரசியலமைப்பிற்கு முரணாகக் காணப்படுவதுடன், அவை நிறைவேற்றப்பட்டால் மக்களின் இறையாண்மைக்கு பாரிய தீங்கு ஏற்படும் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படாது, பொதுமக்கள் அபிப்பிராயத்துடன் திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என உத்தரவிடுமாறு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.