மேலும் 43 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

மேலும் 43 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

கட்டார் மற்றும் இந்தியாவில் சிக்கித் தவித்த 43 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் இன்று(புதன்கிழமை) அதிகாலை நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, கட்டாரிலிருந்து 42 பேரும் இந்தியாவின் மும்பையிலிருந்து ஒருவரும் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த இவர்கள் அனைவரும் பி.சி.ஆர்.சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.