
தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் பலர் வெளியேற்றம்!
தனிமைப்படுத்தல் நடவடிக்கையை பூர்த்தி செய்த 162 பேர் இன்று(புதன்கிழமை) அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
கொரோனா தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம், பூசா, பெரியகாடு, பெல்வெஹெரா, நீர்கொழும்பு மற்றும் ராஜகிரியா ஆகிய தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்தே இவர்கள் வெளியேற்றப்படவுள்ளனர்.
43 ஆயிரத்து 895 பேர் இதுவரை கட்டாய கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை பூர்த்தி செய்துள்ளனர்.
மேலும் 7 ஆயிரத்து 120 பேர் முத்தரப்பு படைகள் பராமரிக்கப்பட்டு வரும் 68 தனிமைப்படுத்தல் நிலையங்களில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதேவேளை நேற்று மாத்திரம் நாட்டில் ஆயிரத்து 530 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டன.
பெப்ரவரி முதல் இதுவரை 2 இலட்சத்து 70 ஆயிரத்து 881 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.