
20ஆவது திருத்த விவகாரம் - உயர் நீதிமன்றத்ததை நாடிய சம்பந்தன்
20 ஆவது திருத்தத்துக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மனு ஒன்றை இன்றையதினம் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.
அரசியலமைப்புக்காக முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தம் நேற்றையதினம் நீதி அமைச்சர் அலி சப்ரியால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
ஒரு வார காலத்தினுள் இதற்கு எதிராக யாரேனும் உயர் நீதிமன்றத்தை நாடினால் 21 நாட்களுக்கு 20ஆவது திருத்தம் தொடர்பான எந்த முன்னெடுப்பையும் நாடாளுமன்றத்துக்குள் முன்னெடுக்க முடியாதென்ற நிலையிலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.