இது ஸ்ரீலங்காவில் ஜனநாயகத்தின் மரணச் சடங்கு! நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை

இது ஸ்ரீலங்காவில் ஜனநாயகத்தின் மரணச் சடங்கு! நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை

20வது அரசியலமைப்பு திருத்தம் ஸ்ரீலங்காவில் 'ஜனநாயகத்தின் மரணச்சடங்கு ' என்று தேசிய மக்கள் சக்தி எச்சரித்துள்ளது.

எனவே அதற்கு எதிராக ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் வாக்களிக்கவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நேற்று நாடாளுமன்றத்தில் வைத்து கேட்டுக்கொண்டார்.

18வது அரசியலமைப்பு திருத்தத்துக்கு வாக்களித்த அத்துரலியே ரத்தன மற்றும் மைத்தரிபால சிறிசேன ஆகியோர் பின்; வந்த காலத்தில் அதன் தாக்கத்தை உணர்ந்தனர்.

1978ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தன கொண்டு வந்த திறந்தப் பொருளாதார கொள்கை காரணமாக ஏற்பட்ட தாக்கத்தை நாடு பின்னரே உணர்ந்தது.

இந்தநிலையில் 20வது அரசியலமைப்பு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டபோது எவரும் அதற்கு எதிராக கருத்துக்கூறவில்லை.

எனினும் வெளியில் வந்தபின்னர் அதனை பற்றி எதிர்க்கருத்துக்களை கூறினர். இதனையடுத்தே அமைச்சர்கள் குழு ஒன்று அது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டது.

எனினும் அந்தகுழுவின் பரிந்துரைகள் அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை.

எனவே ஜனாதிபதி இந்த விடயத்தில் அரசாங்கத்தின்மீது தமது அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளார். விரைவில் எதிர்க்கட்சி மற்றும் பொதுமக்கள் மீது இந்த அதிகாரம் பயன்படுத்தப்படும் என்று விஜித ஹேரத் குறிப்பிட்டார்.