
இன்று முதல் 60 ரூபாய்க்கு தேங்காய்
கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளில் இன்று முதல் சலுகை விலையில் தேங்காய் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறிப்பிட்ட பகுதிகளுக்கு லொரிகளின் மூலம் சலுகை விலையில் தேங்காய் விநியோகிக்கப்படும் என்று தோட்டத் தொழில் அமைச்சகம் கூறியுள்ளது.
இதேவேளை, நாடு முழுவதும் தேங்காயை 60 ரூபாய்க்கு சலுகை விலையில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம், குருநாகல் பெருந்தோட்ட நிறுவனம் இணைந்து இந்த திட்டத்தை தொடங்கியுள்ளன.