அமெரிக்காவில் 2 லட்சத்தை கடந்துள்ள கொரோனா மரணங்கள்...!

அமெரிக்காவில் 2 லட்சத்தை கடந்துள்ள கொரோனா மரணங்கள்...!

கொவிட்-19 காரணமாக சர்வதேச ரீதியில் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ள அமெரிக்காவில், கொரோனா மரணங்கள் 2 இலட்சத்தைக் கடந்துள்ளன.

ஜோன்ஸ் ஒப்கின்ஸ் துழாளெ ர்ழிமiளெ பல்கலைக்கழகத்தின் தகவல்களை மேற்கோள்காட்டி, சர்வதேச ஊடகமொன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

நேற்றைய தினம் வரையில், அமெரிக்காவில் கொவிட்-19 காரணமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 5 ஆக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 70 இலட்சம் பேருக்கு அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

கொவிட்-19 பரவல் குறித்து சீனா மீது, டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தியிருந்தார்.

எனினும், கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் குறித்து, தொடர்ச்சியாக விமர்சனம் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களில் டொனல்ட் ட்ரம்பின் உண்மைக்கு புறம்பான கருத்துகள் மற்றும் திறனின்மை காரணமாக, அமெரிக்க வரலாற்றில் தாங்கள் பாரிய இழப்பை எதிர்கொண்டுள்ளதாக ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பீடன் துழந டீனைந தெரிவித்துள்ளார்.