கொரோனா காரணமாக கட்டாரிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு பூட்டு....!

கொரோனா காரணமாக கட்டாரிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு பூட்டு....!

கட்டாரிலுள்ள இலங்கை தூதரகத்தை இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்றைய தினம் நாட்டில் கொரோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 14 பேர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3313 ஆக உயர்வடைந்தமை குறிப்பிடத்தக்கது.