
சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவிக்கு நேர்ந்த கதி -விசாரணைகள் தீவிரம்
எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள க பொ த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இரத்தினபுரி, பலாங்கொட- பின்னவலவத்த பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
16 வயது மாணவியே இவ்வாறு அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
குறித்த மாணவி படுகொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.