இரத்தினக்கல் மற்றும் ஸ்வர்ண ஆபரணங்கள் அதிகார சபையின் கட்டிடத்தின் சுவரில் பிளவு...!

இரத்தினக்கல் மற்றும் ஸ்வர்ண ஆபரணங்கள் அதிகார சபையின் கட்டிடத்தின் சுவரில் பிளவு...!

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள இரத்தினக்கல் மற்றும் ஸ்வர்ண ஆபரணங்கள் அதிகார சபையின் ஊழியர்கள் இன்று மதியம் அதிகார சபையின் கட்டிடத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

குறித்த கட்டிடடத்தின் சுவர்களில் வெடிப்புக்கள் காணப்படுவதாகவும் தாழிறங்கும் அபாயம் காணப்படுவதாக தெரிவித்து இவ்வாறு கட்டிடத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

குறித்த அதிகார சபைக்குரிய கட்டிடத்திற்கு அருகில் புதிய கட்டிடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதால் இவ்வாறு வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.