உமா ஓயா திட்டத்தை பார்வையிட்ட அமைச்சர் சமல் ராஜபக்ஷ

உமா ஓயா திட்டத்தை பார்வையிட்ட அமைச்சர் சமல்ராஜபக்ஷ

உமா ஓயா அபிவிருத்தி திட்டம் அடுத்த மாதத்திற்குள் நிறைவடையும் என்றும், வெல்லவாய மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு தேவையான அனைத்து நீர் வசதிகளும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.