அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்தைப் பெறத் தயார் : அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்!

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்தைப் பெறத் தயார் : அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்!

19 ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு மக்களின் கருத்துக் கோரல் வேண்டும் எனில், அதனை ஏற்றுக் கொள்ளத் தயார் என கல்வியமைச்சரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார்.

பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“19 ஆவது திருத்தத்தை துண்டு துண்டாக புறக்கணிப்பதாக நாம் கூறவில்லை.19 ஆவது திருத்தத்தை இந்த நாட்டின் சட்டப் புத்தகத்தில் முழுமையாக நீக்குவதாக நாம் மிகவும் தெளிவாக கூறினோம்.

19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் அரசியலமைப்பு திருத்தத்தை நீக்குவதற்கு மக்களின் கருத்துக் கோரல் அவசியம் எனில் அதனை மாத்திரம் நாம் மாற்றப் போவதில்லை.

19 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் நாம் மிகவும் தெளிவாக நீக்கிவிட்டு 20 ஆவது திருத்தத்தை முன்வைப்போம் என்பதை தயக்கமின்றி நாட்டு மக்களுக்கு கூறுகின்றோம்” என பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.