சற்றுமுன்னர் நாடாளுமன்றில் சமரப்பிக்கப்பட்ட 20ஆவது திருத்தச் சட்டமூலம்

சற்றுமுன்னர் நாடாளுமன்றில் சமரப்பிக்கப்பட்ட 20ஆவது திருத்தச் சட்டமூலம்

நாடாளுமன்றில் 20 ஆம் அரசியலமைப்புத் திருத்தம் நீதியமைச்சர் அலி சப்ரியினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது எதிர்க்கட்சியினர் கறுப்புப் பட்டி அணிந்திருந்ததுடன் கறுப்பு பதாதைகளையணிந்து தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

அத்துடன் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டு குழப்பத்தினை ஏற்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் நாளை அரசியலமைப்புத் திருத்தம் மீதான இரண்டாம் வாசிப்பு இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.