கந்தானையில் ரி-56 ரக துப்பாக்கி ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

கந்தானையில் ரி-56 ரக துப்பாக்கி ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

ரி-56 ரக துப்பாக்கி ஒன்றுடனும், 13 தோட்டாக்களுடனும் கந்தான பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேலியகொடை பிரிவு குற்றப் புலனாய்வு துறை அதிகாரிகளினால், நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்தக் கைது இடம்பெற்றதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மற்றுமொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர்கள் இருவரும் நபர் ஒருவரை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்தமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

28 மற்றும் 49 வயதுயை குறித்த சந்தேகநபர்கள், கந்தானை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில். இன்றைய தினம் அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது