சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், குறித்த அலுவலகம் மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜித்தா நகரில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் இருந்து இலங்கைக்கு வந்த ஒருவரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இணங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.