மாணவர்களுக்கு காத்திருந்த ஆபத்து! ஸ்தலத்திற்கு விரைந்த படையினர் மற்றும் பெற்றோர்

மாணவர்களுக்கு காத்திருந்த ஆபத்து! ஸ்தலத்திற்கு விரைந்த படையினர் மற்றும் பெற்றோர்

கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு அருகில் ஆலம் ஒன்றின் பாரிய கிளை முறிந்து விழுந்தமையால் படையினர் மற்றும் பெற்றோர் அதனை சீர்செய்யும் முயற்சியை மேற்கொண்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றுமுதல் பலத்த காற்று வீசி வருகின்றது. இவ்வாறு வழமைக்கு அதிகளவான காற்று வீசியமையால் பல பகுதிகளிலும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

பாடசாலையில் 2400இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்றுவரும் சூழலில் ஆபத்தான மரங்கள் அப்பகுதியில் இருப்பது தொடர்பில் தொடர்ச்சியாக பாடசாலை சமூகத்தினால் சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள போதிலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது.

லைப்ஸ்டைல் செய்திகள்