நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் தொடர்பில் வெளியான தகவல்

நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் நேற்றைய தினம் 12 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய 8 பேருக்கும். இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும், பிரித்தானியா மற்றும் சவுதி அரேபியா முதலான நாடுகளில் இருந்து நாடுதிரும்பிய தலா ஒவ்வொருவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா வைரசால் பீடிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3,299 ஆக அதிகரித்துள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதேவேளை, நாட்டில் கொவிட் 19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 12 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொவிட் 19 தொற்றினால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 100 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், 186 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகினறனர்.