பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்களின் முகாமைத்துவத்தின் நிலைப்பாடு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்களின் முகாமைத்துவத்தின் நிலைப்பாடு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாளாந்த வேதனத்தை வழங்குவதற்கான திட்டம் ஒன்று அவசியமாகும் என பெருந்தோட்ட நிறுவனங்களின் முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

ஆயிரம் ரூபா வேதன அதிகரிப்பு தொடர்பில், பெருந்தோட்ட நிறுவனங்களின் முகாமைத்துவ பணிப்பாளர் ரொஷான் ராஜதுறை இதனைத் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை வெளியிடுகின்றனர்.

வேதன அதிகரிப்பை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில், பேச்சுவார்த்தையின்போது பிரதமரிடம் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதியும் பிரதமரும் இந்த விடயத்தில் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

எனினும், வேதன உயர்வை வழங்கும்போது நிதி இல்லாவிட்டால், என்ன நடக்கும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

எனவே, இந்த விடயத்தில் திட்டம் ஒன்று இருக்க வேண்டும் என பெருந்தோட்ட நிறுவனங்களின் முகாமைத்துவ பணிப்பாளர் ரொஸான் ராஜதுறை தெரிவித்துள்ளார்.