பெண்ணின் மாலையை கொள்ளையடித்த நபர் கிங் கங்கையில் குதித்து மாயம்

பெண்ணின் மாலையை கொள்ளையடித்த நபர் கிங் கங்கையில் குதித்து மாயம்

பெண்ணொருவரின் கழுத்தில் இருந்த தங்க மாலையொன்றை கொள்ளையிட்டு நபரை பிரதேச மக்கள் சுற்றிவளைத்து பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், குறித்த நபர் அங்கிருந்து தப்பியோடி கிங் கங்கையில் குதித்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் சந்தேக நபரை பிரதேசவாசிகள் பிடித்து பத்தேகம காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதன்போது சந்தேக நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து வரும் தருணத்தில் அவர் திடீரென அங்கிருந்து தப்பியோடி கிங் கங்கையில் குதித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் மீடியகொட-பேரதுடுவ பகுதியில் வசித்து வரும் 28 வயதுடையர் என தெரிவிக்கப்படுகிறது

சந்தேக நபரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, கல்கிஸ்ஸ காவல்துறையினர் இரத்மலானை மற்றும் படோவில பகுதிகளில் மேற்கொண்ட தீடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக வைத்திருந்த 728 மதுபான போத்தல்களுடன் 06 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.