
இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் அமையவுள்ள மேலும் 100 வீடுகள்
குருநாகல் மாவட்டத்திற்கு உட்பட்ட பெருந்தோட்டங்களில் வாழும் தொழிலாளர்களுக்கு இந்திய வீடமைப்புத்திட்டத்தின் கீழ் 100 வீடுகளை அமைத்து கொடுக்கவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
குருநாகல் மாநகரசபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஒன்று கூடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பரத் அருள்சாமி இதனை தெரிவித்துள்ளார்.
80 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்துக் கொண்டிருக்கும் எமது ஸ்தாபனம் பெருந்தோட்ட மக்களுக்கு அர்பணிப்புடன் ஆற்றிய சேவைகள் ஏராளம்.
இந்த வகையில் நாம் குருநாகலை பெருந்தோட்ட மக்களின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு அவர்களது வாழ்வு செழிப்பாகவும் உயரவும் வழிவகைகளை செய்து கொடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும் என பரத் அருள்சாமி குறிப்பிட்டுள்ளார்.