மாணவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள இருமாடி கட்டிடம்

மாணவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள இருமாடி கட்டிடம்

கேகாலை-ஹெம்மாதகம நகரில் அமைந்துள்ள இரண்டு மாடி கட்டிடமொன்று ஆபத்தான நிலையில் காணப்படுவதாக தெரிவித்து, அதனை மூடுவதற்கு காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து, இன்று காலை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் குழு முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொண்டது.

தற்போது கட்டிடத்தில் பல விரிசல்கள் உள்ளதாகவும், எனவே இதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு குறித்த கட்டிடம் ஆபத்தை ஏற்படுத்துமெனவும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இக்கட்டிடன் ஹெம்மாதகம நரகிரி வித்தியாலயத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் அமைந்துள்ளதோடு, தினமும் ஏராளமான மாணவர்கள் அதன் அருகே நடந்து செல்வது மிகவும் ஆபத்தானது என பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.