நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற முறைக்கேடுகள் தொடர்பில் வெளியான மற்றுமொரு விடயம்
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அரச வங்கிகள் மற்றும் அவற்றின் இணை நிறுவனங்கள் செய்த முறைக்கேடுகள் தொடர்பில் 100க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைததுள்ளதாக இது தொடர்பில் ஆராயும் குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது.
அதன்படி, இந்த முறைப்பாடுகள் அரச வங்கிகள், இணைந்த தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்களினால் வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அதிகளவான முறைப்பாடுகள் தற்போது கிடைத்த வண்ணம் உள்ளதால், முறைப்பாடுகளை பெறுவதற்கான கால எல்லை இம்மாதம் 30ஆம் திகதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது