புதுக்குடியிருப்பு பகுதியில் 738 மதன மோதக வில்லைகளுடன் ஒருவர் கைது

புதுக்குடியிருப்பு பகுதியில் 738 மதன மோதக வில்லைகளுடன் ஒருவர் கைது

திருகோணமலை - தம்பலகாமம் - புதுக்குடியிருப்பு பகுதியில் 738 மதன மோதக வில்லைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய இன்றைய தினம் விற்பனை நிலையம் ஒன்றை சோதனை செய்த போதே சந்தேகத்திற்குரியவர் கைது செய்யப்பட்டுள்ளார்

தம்பலகாமம் அக்கினிப் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை தம்பலகாம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.