சஜித் பக்கம் தாவிய மஹிந்த - ரணில் ஆதரவாளர்கள்!

சஜித் பக்கம் தாவிய மஹிந்த - ரணில் ஆதரவாளர்கள்!

சஜித் பிரேமதாஸவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இன்றைய தினம் மஹிந்த மற்றும் ரணிலின் தீவிர ஆதவாளர்கள் மூவர் இணைந்து கொண்டுள்ளனர் என கட்சியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினை சேர்ந்த மதுசங்க குறுப்பு ஆராச்சி மற்றும் சந்திம பண்டார ஆகியோர் இன்று எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினராவதற்கு விண்ணப்பித்துள்ளனர்.

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் ராஜ்கம பிரதேச சபையின் உறுப்பினர் துலாஜ் தரங்காவும் இன்றைய தினம் தனது ஆதரவினைத் தெரிவித்து கட்சியில் இணைந்து கொண்டுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.